மகனுக்கு சொகுசு கார் பரிசளித்த நடிகை ரோஜா! விலை இத்தனை கோடியா.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

By Parthiban.A Jul 15, 2022 12:10 PM GMT
Report

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். கார்த்திக், பிரபு, ரஜினி, விஜயகாந்த் உட்பட பல டாப் ஹீரோக்கள் உடன் நடித்து இருக்கிறார். பின்னர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அவர் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார். அவர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார்.

ரோஜாவுக்கு அன்ஷு மாலிகா என்ற மகளும், கௌஷிக் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ரோஜா தன் மகனுக்கு விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மகனுக்கு சொகுசு கார் பரிசளித்த நடிகை ரோஜா! விலை இத்தனை கோடியா.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம் | Actress Roja Gifts Costly Benz Car To Son

அந்த பென்ஸ் காரின் விலை ஒன்றரை கோடி ருபாய் என்றும் கூறப்படுகிறது. இதை பார்த்து ரோஜா மீது அதிக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. தான் பணக்காரி இல்லை என சொன்ன ரோஜா இப்போது எப்படி கோடிக்கணக்கில் கொடுத்து கார் வாங்கி கொடுக்கிறார் என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அவர் அமைச்சர் ஆகிவிட்ட பின் அதிகம் சம்பாதிக்கிறார் போல என்றும் விமர்சனங்கள் வர தொடங்கி இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US