விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா... அப்படி என்ன சொன்னார்?
நடிகை ரோஜா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 1990களில் டாப் நாயகியாக வலம் வந்தார்.
பட வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த போதிலும் ரோஜாவிற்கு அரசியல் மீது பார்வை விழ அதில் முழு கவனம் செலுத்த தொடங்கினார்.

அரசியலில் முழு ஈடுபாடு காட்டியதால் நடிப்பில் இருந்து சுத்தமாக விலகினார்.
அய்யனார் துணை தெலுங்கு ரீமேக்கில் Lead ரோலில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகர்... யார் தெரியுமா, குவியும் வாழ்த்து
காரணம்
சமீபத்தில் நடிகை ரோஜா ஒரு பேட்டியில், நடிகர் விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன்.

அப்போது கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார், யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். பின் சில வருடம் கழித்து காவலன் படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.
அப்போது என்னை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், மேடம் நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா? நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம் என்று கூறினார்.
தெலுங்கில் கூட கோபிசந்த் இதுபோலவே கூறினார். அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கியதாக கூறியுள்ளார்.
