வேறு ஜாதி என்றாலும் செல்வமணியை திருமணம் செய்ய பெற்றோர்கள் சம்மதித்தது எப்படி?- நடிகை ரோஜா ஓபன் டாக்
நடிகை ரோஜா
தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
பிஸியாக நடித்துக்கொண்டு முன்னணி நாயகியாக வலம் வந்த ரோஜா அரசியலில் நுழைந்ததும் அதில் முழு ஈடுபாடு காட்டி இப்போது அமைச்சராக உள்ளார்.
இவர் அண்மையில் கொடுத்த பேட்டியில் தனது காதல் கணவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தது எப்படி என்று கூறியுள்ளார்.

நடிகையின் பேட்டி
அதில் அவர், செம்பருத்தி போது எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது, அப்போது என்னிடம் வந்து பேச இவர் ரொம்பவே வெட்கப்படுவார், ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவர். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் காதல் உருவானது.
செல்வா தான் என்னுடைய அப்பா, அம்மாவிடம் வந்து அவருடைய காதலை சொன்னார். என்னுடைய பெரிய அண்ணா தான் எங்களுடைய வீட்டினுடைய எல்லா முடிவுகளையும் எடுப்பார், அவரிடம் இந்த விஷயத்தை சொன்னபோது அவரும் ஒத்துக் கொண்டார்.
அதற்கு காரணம் செல்வாவின் கேரக்டர் தான், சினிமா துறையில் இருந்துகொண்டு இப்படி இருக்கிறாரே என்று எனது வீட்டில் இருப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியது.
இதனால் தான் வேறு ஜாதியாக இருந்தால் கூட பரவாயில்லை என திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள் என சந்தோஷமாக கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri