பொண்டாட்டி கிட்ட தோத்து போங்க.. நடிகை ரோஜா கொடுத்த அட்வைஸ்
நடிகை ரோஜா
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரோஜா. இவர் இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நடிகையாக வலம் வந்த ரோஜா, ஒரு கட்டத்தில் அரசியலில் களமிறங்கினார். ஆந்திராதவின் அமைச்சராக சேவை செய்து வந்தார்.
இந்த நிலையில், நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள ரோஜா, சமீபத்தில் மேடை ஒன்றில் தனது கணவர் குறித்து பேசியிருந்தார்.
ரோஜாவின் பேச்சு
அவர் கூறியதாவது "நான் தான் எப்பவுமே சண்டை போடுவேன். செல்வமணி சார் எப்பவுமே சண்டை போட மாட்டார். கோபம் வந்ததுன்னா சீரியஸா ரூமுக்குள்ள போய் கதவை மூடிப்பார். கோபம் குறைந்தது பிறகுதான் வெளியே வருவார். ஏன்னா, அவர் திட்டினா நான் அழுவேன். அப்புறம் என்னை சமாதானம் படுத்தனும். இதெல்லாம் எதுக்குன்னு அவருக்கு தெரியும். வாழ்க்கையில ஜெயிக்கணும்னு நினைச்சா பொண்டாட்டி கிட்ட தோத்துப் போங்க. பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டா வீட்டுல சண்டை போட்டுக்கிட்டே தான் இருக்கணும். வெளியே போய் ஜெயிக்க முடியாது" என கூறியுள்ளார்.
ரோஜாவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
