நடிகை ருக்மிணி வசந்த் எச்சரித்து வெளியிட்ட பதிவு.. ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு
ருக்மிணி வசந்த்
கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றது.

ரூ. 855+ கோடி வசூல் செய்து 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. அடுத்ததாக ருக்மிணி வசந்த் நடிப்பில் டாக்ஸிக் மற்றும் NTR Neel ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
முறைகேடு
இந்நிலையில், தன்னை போலவே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடப்பதாக ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், " முக்கியமான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்தி. 9445893273 என்கிற எண்னை பயன்படுத்தும் ஒருவர் என்னைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களை தொடர்கொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த எண் என்னுடையது அல்ல என்பதையும், அதிலிருந்து வரும் எந்த செய்திகளும் அல்லது அழைப்புகளும் முற்றிலும் போலியானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது ஈடுபடவோ வேண்டாம்".

"இந்த ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது. மேலும் இதுபோன்ற மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்தவொரு தெரிவுபடுத்தலுக்கும் அல்லது சரிபார்ப்புக்கும் என்னையோ அல்லது எனது குழுவையோ நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. ஆன்லைனில் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருங்கள்" என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.