கூட்டத்தில் பிக்பாக்கெட் அடித்த நடிகை போலீசாரால் கைது- ரசிகர்கள் ஷாக்
அந்த காலத்தில் பிரபலங்கள் என்றாலே மக்கள் மனதில் ஒரு தனி மரியாதை இருந்தது. ஆனால் இப்போது உள்ள பிரபலங்களுக்கு மக்கள் சரியான மரியாதை, அங்கீகாரம் கொடுக்கிறார்களா என்றால் கேள்விக் குறி தான்.
அதேபோல் பிரபலங்களும் முந்தைய கால கலைஞர்களை போல நடந்துகொள்வது இல்லை. அப்படி ஒரு பிரபலத்தின் மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ரூபா தத்தா
பெங்காலி நடிகையான இவர் கொல்கத்தாவில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் குப்பை தொட்டியில் பர்ஸ் ஒன்றை வீசுவதை போலீசார் பார்த்துள்ளனர், பின் அவரிடம் விசாரனையும் நடத்தியுள்ளனர்.
அதில் அவர் பலரது பர்ஸ்களை திருடி இருப்பது தெரியவந்துள்ளது. அவரது பையில் 75 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்துள்ளது. தொடர் விசாரணையில் புத்தக கண்காட்சியில் வந்தவர்களின் பர்ஸை நடிகை பிக்பாக்கெட் அடித்தது அம்பலமானது.
இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

MeToo
சில வருடத்திற்கு முன் எல்லா மொழிகளிலும் சினிமா துறையில் MeToo பிரச்சனை தலைஓங்கியது. அப்போது நடிகை ரூபா தத்தாவும் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது MeToo புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஓவியாவா இது, நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan