சினிமாவில் நடந்த அந்த கசப்பான சம்பவம்!! தன்ஷிகா ஓபன் டாக்..
தன்ஷிகா
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை தன்ஷிகா. கடைசியாக இவர் 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லாபம்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ராதிகா இயக்கத்தில் உருவாகியுள்ள the proof என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வீடியோ வெளியானது. அதில் தன்ஷிகா படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபன் டாக்
சமீபத்தில் தன்ஷிகா பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர், நான் தமிழ் பொண்ணு வல..வல.. என்று தான் பேசுவேன், ஆனால் என்னை அப்படி எல்லாம் பேசுக் கூடாது, இவ்வாறு தான் பேச வேண்டும் என்று சொன்னார்கள்.
நான் பிரவுன் நிறத்தில் இருப்பேன். அதனாலேயே என்னை அதிகம் மேக்கப் போட சொல்வார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் என்னை ரொம்ப insecure -ஆ பீல் செய்ய வைத்தது. ஆனால் தற்போது எல்லாம் அப்படி இல்லை.. நிறைய மாறிவிட்டது சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri