முத்த காட்சி, படுக்கையறை காட்சியில் நடிக்க உடன்பாடு இல்லை!! ஓபன்னாக பேசிய தன்ஷிகா..
தன்ஷிகா
மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தன்ஷிகா. இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த பேராண்மை படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
காபலி படத்திற்கு பின் இவர் நடித்த எந்த படங்களுக்கும் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.

ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தன்ஷிகா, கிளாமர் மற்றும் முத்த காட்சிகளில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் பொதுவாக கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஏன் என்றால் நான் கிளாமருக்கு செட் ஆகமாட்டேன். சிலர் அதை அழகாக காட்டுவார்கள். சிலரோ வலுக்கட்டாயமாக திணிப்பார்கள்.
தி புரூப் படத்தில் அழகான கிளாமர் என்பதால் அதில் நடித்துள்ளேன். கவர்ச்சியாக நாம் நடிப்பது கதையை பொறுத்து தான் இருக்கிறது.
எனக்கு படுக்கையறை, முத்த காட்சிகளில் நடிக்க உடன்ப்பாடு இல்லை. எனக்கும் மிகவும் பிடித்தமான நடிகை என்றால் அது சாய் பல்லவி தான். அதே போல தனுஷின் நடிப்பை கண்டு வியக்கிறேன் என்று தன்ஷிகா கூறியுள்ளார்.

குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri