நடிகை சாய் பல்லவிக்கு திருமணமா? தீயாய் பரவும் தகவல்
சாய் பல்லவி
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இதன்பின் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழிலும் கால்பதித்தார்.
இதனை தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். மேலும் தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி ஓரிரு படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மீண்டும் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதவிர்த்து வேறு எந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதனை நிராகரித்து வருகிறாராம் சாய் பல்லவி.
விரைவில் திருமணமா
இதுகுறித்து அவர் கூறியபோது " தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. சாய் பல்லவி என்றால், நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால், நல்ல கதைக்காக நான் காத்திருக்கிறேன் " என்று கூறியுள்ளார். ஆனால், தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் சாய் பல்லவி திருமணம், அதனால் தான் அவர் படங்களை நிராகரித்து வருகிறார் என கூறுகிறார்கள்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
