4000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
சாய் பல்லவி
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா பார்ட் 1 மற்றும் 2. இப்படத்தில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார்.

ராமாயணா பார்ட் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார். இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் இதுவே ஆகும். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்து வருவதால், இது அவருடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சாய் பல்லவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ. 47 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால், ராமாயணா திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri