புத்தாண்டை இப்படியும் கொண்டாடலாமா?.. சாய் பல்லவி செயலால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
சாய் பல்லவி
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.
இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவியின் ஹோம்லி லுக் மற்றும் எதார்த்தமான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மேலும், நாக சைதன்யாவுடன் `தண்டேல்` படத்தில் நடித்துள்ளார்.
சாய் பல்லவி செயல்
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று சாய் பல்லவி அவரது குடும்பத்துடன் பூஜை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
சாதாரண பக்தர்களில் ஒருவராக புட்டபத்தி பாபா கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சாய் பல்லவியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோடிகளில் சம்பளம் பெரும் சாய் பல்லவி மிகவும் எளிமையாக சிவப்பு நிற உடையில் தியானம் செய்து வரும் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.