கூலி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என தொடர்ந்து இணையத்தில் செய்திகள் உலா வந்தது. சூழல் இப்படி இருக்க இந்த தகவல் தற்போது உண்மையாகி உள்ளது.
அதாவது, கூலி படத்தில் பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார். இவர் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இத்தனை கோடியா?
தற்போது, கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அவருக்கு ரூ.2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறதாம்.