15 ஆண்டுகள், என் நிறைவேறாத ஆசை.. நடிகை சமந்தா உடைத்த உண்மை
சமந்தா
உழைப்பால் உயர்ந்த பிரபலங்களில் ஒருவர் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்தவர் உடல்நிலை குறைவால் இடையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கடைசியாக சமந்தா நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது, இதில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றது.
நிறைவேறாத ஆசை
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தன் நிறைவேறாத ஆசை குறித்து நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.
அதில், " 15 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி படிப்புக்குப் பின் சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது ஆனால் அந்த கனவு சில காரணங்களால் நிறைவேறாமல் போய்விட்டது" என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
