கர்ப்பமாவது குறித்து ஓபனாக பேசிய நடிகை சமந்தா- என்ன சொல்லியிருக்கார் பாருங்க
நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகை. இவரையும் அஜித்தை போன்ற எண்ணம் கொண்டவர் என்றே கூறலாம்.
காரணம் படப்பிடிப்பை தாண்டி பல விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இப்போது சமந்தா ஸ்கேடிங் பயிற்சி செய்து வருகிறார். ஸ்விட்சர்லாந்தில் அவர் கற்றுக்கொண்டிருக்கும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிநது. அந்த பேட்டியில், பெண்கள் கர்ப்பமாவது குறித்து பேசியுள்ளார்.
பெண்கள் உண்மையிலேயே ரொம்ப ஸ்டிராங். உலகத்திலேயே மிக வலியான நிகழ்வு என்றால் அது குழந்தை பிறப்பு தான். அந்த வலியையும் பெண்கள் துணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தை பிறப்பின் போது உச்சபட்ச வலியையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்த பிறகும் பல வலிகளை தாங்கிக் கொள்கிறார்கள் என பெருமையாக பேசியுள்ளார்.