மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகை சமந்தா... போட்டோவுடன் இதோ
நடிகை சமந்தா
பல்லாவரத்து பொண்ணு என தமிழ் ரசிகர்களால் செல்லமாக கொண்டாடப்பட்டவர் நடிகை சமந்தா. வேலை செய்ய ஆரம்பித்த போது முதன்முதலில் ரூ. 500 சம்பளம் வாங்கி தனது பயணத்தை தொடங்கியவர்.
மாடலிங்கில் கொஞ்சம் பிக்கப் ஆனதும் படங்களில் நாயகியாக நடிக்க களமிறங்கியவர் வெகு விரைவிலேயே விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார். தமிழில் முன்னணி நாயகியாக வளர அப்படியே தெலுங்கு பக்கம் சென்று அங்கேயும் கலக்கினார்.
சோலோ நாயகியாக சில படங்கள் நடிக்க அதிலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கினார். இடையில் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட படங்கள் நடிக்கவில்லை. கடைசியாக நடிகை சமந்தா நடிப்பில் சிடாமல் என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.
தமிழில் அவரது படங்கள் வெளியாகி நீண்ட வருடம் ஆகிவிட்டது.
புதிய வீடு
இப்போது தனது சொந்த தொழில்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் போட்டோ ஷுட்கள், விளம்பரங்கள் என நடித்துவரும் சமந்தா இப்போது மும்பையிலேயே அதிகம் காணப்படுகிறார்.
ஹைதராபாத்தில் இருந்த சமந்தா தற்போது தனது வீட்டை மும்பைக்கு மாற்றிவிட்டதாக தெரிகிறது.
அதாவது நடிகை சமந்தா மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளார், வீட்டின் பூஜையின் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ,