உடல் எடையை குறைக்க நடிகை சமந்தா தினமும் குடிக்கும் பானம் என்ன தெரியுமா?
நடிகை சமந்தா
நடிகை சமந்தா மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 சம்பளம் பெற்று தனது பயணத்தை தொடங்கியவர்.
இப்போது தமிழை தாண்டி தெலுங்கு, பாலிவுட் சினிமா என கலக்கி வருகிறார். சினிமாவில் ஒரு இடத்தை பிடித்த இவர் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஒரு முட்டுக் கட்டையாக அமைந்துவிட்டது உடல்நலக் குறைவு.
ஆனால் நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட நோயை மிகவும் தைரியமாக எதிர்க்கொண்டு வருகிறார். அவ்வப்போது அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

பிட்னஸ் சீக்ரெட் சமந்தா
தன்னுடைய அழகை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கீரைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூதியை தினமும் காலையில் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.
கீரைகள் அமைந்த ஸ்முதியில் இலைக்கோசு, பசலைக்கீரை, ஆளி விதைகள், சூரிய காந்தி விதைகள், பாதாம், சியா விதைகள் மற்றும் இளநீர் சேர்ந்தது தான் அந்த ஸ்மூதியாம்.
