பேமிலி மேன் வெற்றியை தொடர்ந்து திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா- விவாகரத்துக்கு பிறகு அதிரடி
தமிழ் சினிமா என்று எடுத்துக் கொண்டாலே முதலில் நாயகர்கள் தான் அதிகம் கொண்டாடப்படுவார்கள். அந்த காலம் முதல் இப்போது வரை நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போது உள்ள கதையே வேறு, நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் நல்ல தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வசூலில் சாதனை படைக்கின்றனர், நாயகர்களின் படங்களுக்கு இணையான வசூலை கொடுக்கிறார்கள்.
அப்படி அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, சமந்தா என நடிகைகள் பெரிய ஹிட் படங்கள் கொடுத்து நாயகர்களுக்கு இணையாக கொண்டாடபபடுகிறார்கள்.
நடிகை சமந்தா தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வெற்றி நாயகியாக வலம் வர தற்போது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளாராம்.
புதிய படங்களுக்கு ரூ. 4 கோடி வரை அவர் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.