பாலிவுட்டில் பிசியாகும் நடிகை சமந்தா.. தொடர்ந்து எத்தனை படங்களில் நடிக்கிறார் தெரியுமா
நடிகை சமந்தா
தென்னிந்தியளவில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் உருவாகிவருகிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக இருந்த சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிசியாக பல படங்களில் நடிக்க துவங்கியுள்ளாராம். கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் இவருக்கு ஹிந்தியில் அறிமுகத்தை ஏற்படுத்தியது.
பாலிவுட்டில் பிசி
அதை தொடர்ந்து பாண் இந்தியா படமாக வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடிய நடனம், பாலிவுட் திரையுலகை கவர்ந்துள்ளது. சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து புதிய ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி கரண் ஜோகர் தயாரிப்பில் அக்ஷய் குமாருக்கும் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆயுஷ்மான் குரானாவுடனும் ஒரு படத்தில் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதுமட்டுமின்றி ரன்வீர் சிங்குடன் இணைந்து விளம்பர படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மூன்று பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா முடிவெடுத்துள்ளாராம். இதற்கான கதை கேட்கும் முயற்சியில் சமந்தா ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
