பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா.. நயன்தாரா, திரிஷவை பின்னுக்கு தள்ளுவாரா
சமந்தா
இந்தியளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறிவிட்டார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை.
ஆனாலும், தனது மார்க்கெட்டை இழக்காமல் இருக்கிறார். படங்கள் மற்றும் வெப் தொடரிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஏற்கனவே பேமிலி மேன் 2 வெப் தொடர் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக சீட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கி வருகிறார்.
சமந்தா சம்பளம்
இந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் தான் தற்போது சமந்தா பிசியாக இருக்கிறார். இந்நிலையில், இந்த வெப் தொடரில் நடிக்க நடிகை சமந்தா ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை படங்களில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார்.
இதன்மூலம் இனி வரும் காலகட்டத்தில் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷாவை நடிகை சமந்தா பின்னுக்கு தள்ளுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சீதா ராமன் தொடரில் பிரியங்கா நல்காரி பதிலாக நடிக்கப்போகும் நடிகை இவர்தானா?- விஜய் டிவி தொடர் நாயகி