இதை சொன்னால் என்னை கொன்று விடுவார்கள்.. பிரபல நடிகர் குறித்து பேசிய நடிகை சமந்தா
சமந்தா
நடிகை சமந்தா ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.
பின் தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த சமந்தா, இன்று ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார்.
மேலும் தற்போது அல்லு அர்ஜுன், ராம் சரண் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் சமந்தா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
சமந்தாவின் பேட்டி
இந்த நிலையில், சமந்தாவின் பழைய பேட்டி ஒன்றில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் மகேஷ் பாபு பார்க்க குட் லுக்கிங் ஆக இருக்கிறாரா என கேட்டு ரேட்டிங் கொடுக்க சொல்கிறார்கள். அதற்கு நடிகை சமந்தா 10க்கு 10 என்கிற ரேட்டிங் தருகிறார்.
இதன்பின் பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோவான ஹ்ரித்திக் ரோஷனுக்கு எவ்வளவு ரேட்டிங் தருவீர்கள் என கேட்க, "இதை கூறினால் அனைவரும் என்னை கொன்று விடுவார்கள். எனக்கு ஹ்ரித்திக் ரோஷனின் லுக் பெரிதளவில் பிடிக்காது" என கூறியுள்ளார். மேலும் 10க்கு 7 என ரேட்டிங் கொடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் சமந்தா அளித்த இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.