நடிகை சங்கீதா மற்றும் க்ரிஷ் ஜோடியின் மகளா இது, வெளியான சூப்பர் குடும்ப பதிவு..!
நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், இவர் தமிழ் சினிமாவிற்கு முதலில் கதாநாயகியாக அறிமுகமானாலும் பின்னர் பல முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அந்த வகையில் கடைசியாக நடிகர் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வெங்கட் பிரபுவின் Anthology திரைப்படமான குட்டி ஸ்டோரி படத்திலும் நடித்திருந்தார் நடிகை சங்கீதா.
இந்நிலையில் நடிகை சங்கீதாவிற்கும் பிரபல பாடகரான க்ரிஷிற்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷிவியா என்ற மகளும் உள்ளார்.
மேலும் தற்போது சங்கீதா, க்ரிஷ் மற்றும் ஷிவியா மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை க்ரிஷ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
#NewProfilePic pic.twitter.com/Uw5wqat0Ea
— KRISHH (@krishoffl) March 13, 2021