இரண்டு முறை ஆபரேஷன், உதவாத உறவு- பல சோகங்களை கடந்துள்ள நடிகை சங்கவி, அவரது எமோஷ்னல் பேச்சு
நடிகை சங்கவி
90ஸ் கிட்ஸ்களால் ஒருசில நடிகைகளை மறக்கவே முடியாது, அதில் ஒரு பிரபலம் தான் நடிகை சங்கவி.
கர்நாடகாவை சேர்ந்த சங்கவி, அஜித்தின் அமராவதி படம் மூலம் தமிழுக்கு வந்தார், பின் விஜய்யுடன் ரசிகன் படத்தில் நடித்தார். அதன்பிறகு நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோவை மாப்பிள்ளை என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார்.
படங்களை தாண்டி கோகுலத்தில் சீதை, சாவித்திரி, காலபைரவா என சீரியல்களிலும் நடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்
2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு பின் முதல்முறை கர்ப்பமான போது 7வது வாரத்தில் இதயத்துடிப்பு நன்றாக உள்ளது என கூறிய மருத்துவர்கள் 8வது வாரத்தில் இதயத்துடிப்பு இல்லை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முதல் குழந்தை இப்படி ஆனதும் மிகவும் உடைஞ்சு போனாராம், அப்போது என்னவெல்லாம் செய்தோம், ஏன் இப்படி ஆனது என நிறைய யோசித்தாராம். அப்போது உடன் இருந்தவர்கள் நீ அதை செஞ்சது தப்பு இது செஞ்சது தப்பு என்று இவரைத்தான் குறை கூறியிருக்கிறார்கள்.
இரண்டாவது முறை கர்ப்பமான போதும் சில பிரச்சனையால் தங்கவில்லையாம். இதனால் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்த சங்கவிக்கு அவரது கணவர் தான் ஆறுதலாக இருந்துள்ளார்.
பின் 3வது முறையாக 2020ம் ஆண்டு சங்கவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பெரிய விபரீதத்தில் இருந்து உயிர் தப்பிய தொகுப்பாளினி ரம்யா- அவரே வெளியிட்ட போட்டோ
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)