சீரியலில் களமிறங்கும் பிரபல திரைப்பட நடிகை சங்கவி... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?
நடிகை சங்கவி
தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கவி. முன்னணி நடிகர்களான அஜித், விஜய் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார், ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
முதன்முதலாக 1993ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கொக்கரக்கோ என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

அதன்பின், ரசிகன், நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லா நடிகைகளை போல இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 15 வருடங்களில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

புதிய என்ட்ரி
2016ம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்த சங்கவி பின் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
தற்போது என்ன தகவல் என்றால் சங்கவி இப்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறாராம். பாளையத்து அம்மன் என பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரில் நடிக்கிறாராம், இந்த புதிய சீரியல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.