நடிகருடன் விவாகரத்து பெற்று தனது மகன்களுடன் வசிக்கும் சரிதா- அவரது மகன்களை பார்த்துள்ளீர்களா?
நடிகை சரிதா
80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை சரிதா.
கடந்த 1978ம் ஆண்டு மரோ சரித்ரா என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர் தப்புத்தாளங்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.‘
தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்ற படங்களில் பெயர் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ள சரிதா மாநில விருதுகள், 7 பிலிம்பேர் விருது, 9 திரைப்பட சங்க விருது என வாங்கியுள்ளார்.
குடும்பம்
1975ம் ஆண்டு வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்த இவர் ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றார். பின் 12 ஆண்டுகள் கழித்து 1988ல் நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சிரவன், தேஜாஸ் என இரு மகன்களை பெற்றார்.
23 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனது மகன்களுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
தற்போது அவர் தனது இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
திருநங்கையுடன் உறவு, நடிகை திவ்யா பகீர் குற்றச்சாட்டு- சீரியல் நடிகர் அர்னவ் பதிலடி

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
