Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்
சரோஜா தேவி காலமானார்
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று காலமானார். அவருடைய வயது 87. உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில் அறிமுகமான சரோஜா தேவி, தனது முதல் படத்திற்காகவே தேசி விருதை பெற்றவர். பின் 1958ம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அன்பே வா, ஆசைமுகம், ஆலயமணி, பார்த்திபன் கனவு, கல்யாபாரிசு, எங்கள் வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார் சரோஜா தேவி.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri