வாரிசு படம் இப்படி தான் இருக்கும்.. படத்தில் நடித்த முக்கிய நடிகை கூறிய தகவல்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளளார்.
தமன் இசையமைக்க இப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே எனும் பாடல் அண்மையில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து Youtubeல் பல சாதனைகளையும் படைத்து வருகிறது.
வாரிசு படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷ்யாம், குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
படம் இப்படி தான் இருக்கும்
இதில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் சங்கீதா ஜீ தமிழ் நிகழ்ச்சியில் வாரிசு படம் குறித்து பேசியுள்ளார்.
"தளபதி விஜய் பல வருடங்கள் களித்து இப்படியொரு படத்தில் நடிக்கிறார். வாரிசு திரைப்படம் கண்டிப்பாக சிறப்பான Family Entertainer-ஆக இருக்கும். அதுமட்டுமின்றி நல்ல மெசேஜ் கூட படத்தில் இருக்கிறது. குடும்பமாக வந்த இப்படத்தை பார்த்து ரசிக்கலாம்" என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா குடும்பத்தில் புதிய ஹீரோயின் ரெடி.. மணி ரத்னமே அறிமுகம் செய்வாரா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
