புகைப்படத்தில் உள்ள சிறுமிகளில் ஒரு நட்சத்திர நடிகை இருக்கிறார்.. அட இவரா?
தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு சில பிரபலம் யார் என தெரியும், சிலரது புகைப்படங்களை கண்டுபிடிக்கவே முடியாது.
அந்த வகையில், மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் கலக்கிய ஒரு நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் தான் தற்போது வெளியாகி உள்ளது.
அட இவரா?
அவர் வேறு யாருமில்லை, மாதவன் நடித்த ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கிய நடிகை மீரா ஜாஸ்மின் தான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் Paadam Onnu: Oru Vilapam என்ற மலையாள படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றார்.
தமிழில் மீரா ஜாஸ்மின் நடித்த முக்கியமான படங்கள் என்றால் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜுட், ஆயுத எழுத்து, சண்டக்கோழி, விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது போன்ற படங்களை கூறலாம்.
தற்போது, இவர் பள்ளி பருவத்தில் அவரது நண்பர்களுடன் எடுத்த போட்டோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.