எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு- மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகை சீதா
நடிகை சீதா
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தான் சீதா. ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
ஒருகாலத்தில் பிஸியாக நடித்த நடிகையாக ஒரு நாளைக்கு மூன்நு ஷிப்ட் கூட நடித்திருக்கிறாராம். இப்படி பிஸியாக நடித்துவந்த சீதாவின் திரைப்பயணம் பாதியிலேயே முடிந்ததற்கு இவரது திருமண வாழ்க்கை தான் காரணமாம்.
வருந்தும் நடிகை
1989ம் ஆண்டு இவருக்கு நடிகர் பார்த்திபனுக்கும் திருமணம் நடந்தது. அதன்பின் சீதா நடிப்பது பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை என்பதால் நடிப்பதை நிறுத்தியுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவர்களுக்கு திருமணம் முடிந்தது.
10 வருடங்களுக்கு பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள். 2001ம் ஆண்டு விவாகரத்து ஆனபின் மீண்டும் நடிக்க வந்த சீதா அதன்பிறகு சீரியல் நடிகர் சதீஷை மறுமணம் செய்தார்.
அந்த திருமணமும் சீதாவிற்கு சரியாக அமையவில்லை, விவாகரத்து பெற்றார்கள்.
அண்மையில் ஒரு பேட்டியில் சீதா, யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும், அந்த அடையாளம் இருக்கும் இடத்திலிருந்து நாம் விலகிப் போனால் பிறகு அந்த இடத்தை பிடிப்பது மிகவும் கஷ்டம்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தியது எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என வருத்தமாக சீதா பேசியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
