அடேங்கப்பா 58 வயதாகும் நடிகை சீதாவா இது?- மாடர்ன் உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் வைரல்
நடிகை சீதா
தமிழ் சினிமாவில் 80, 90களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சீதா.
தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்தவர் சின்னத்திரையில் சீரியல்கள், வெப் சீரிஸ் என எல்லா துறையிலும் ஒரு வலம் வருகிறார்.
சீதாவிற்கு பெரிய ரீச் கொடுத்த படங்கள் என்றால் ஆண்பாவம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், ஷங்கர் குரு, துளசி, தங்கச்சி, குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி என பல படங்கள் கூறலாம்.
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
நாயகியாக நடித்து வந்தவர் சொந்த வாழ்க்கையால் சினிமாவில் இருந்து விலகி இருக்க பின் 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக ரவி மோகனின் பிரதர் மற்றும் அக்கேனம் படங்களில் நடித்திருந்தார்.

போட்டோ ஷுட்
சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக இருக்கும் சீதா லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

58 வயதில் செம ஸ்டைலிஷ் உடையில் இளம் நாயகிகளுககு டப் கொடுக்கும் வகையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த போட்டோஸ் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
