நடிகை சீதாவா இது, திடீரென என்ன இப்படி ஆகிவிட்டார்... காரணத்தை கூறிய பிரபலம்
நடிகை சீதா
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை சீதா.
1985ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ஆண் பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அடுத்தடுத்து நிறைய வெற்றிப் படங்களை நடித்தவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, கலைமாமணி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். முன்னணி நாயகியாக இருந்த போதே நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
இவர்களுக்கு அபினயா, கீர்த்தனா, ராக்கி என 3 குழந்தைகள் உள்ளனர், பின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
வீடியோ
விவாகரத்து மறுமணம் மறுபடியும் பிரிவு என சொந்த வாழ்க்கை பிரச்சனையால் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் மீண்டும் கேமரா பக்கம் வந்துள்ளார்.
ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என பிஸியாகியுள்ள சீதா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது தலைமுடியை மொட்டை அடித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் காரணம் என்ன என்று கூறவில்லை, அவருடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவர் சோகமாக இருந்ததால் தான் இவர் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.