இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ஷாலினி
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி பின் வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகைகள் எல்லாம் உள்ளார்கள். அவர்களின் லிஸ்டில் நடிகை ஷாலினிக்கு டாப்பில் இடம் உள்ளது என்றே கூறலாம்.
தமிழ், மலையாளம் என நடிக்க தொடங்கிய இவர் 1997ம் ஆண்டு பாசில் இயக்கத்தில் அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கினார், அப்படம் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் ஆக, விஜய்யுடன் ஜோடியாக ஷாலினி நடித்தார். அடுத்து ஷாலினி, அஜித்துக்கு ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடிக்க அவர்களுக்குள் காதலும் மலர்ந்தது.
அடுத்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே என நடித்துவந்த ஷாலினிக்கு 2000ம் ஆண்டு அஜித்துடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறகு மகள் பிறக்க 2015ம் ஆண்டு மகனும் பிறந்தார். சமூக வலைதளத்தில் வலம்வர ஆரம்பித்துள்ள ஷாலினி தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
சொத்து மதிப்பு
இன்று நடிகை ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே நடிகை ஷாலினி ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அப்படி டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ஷாலினியின் சொத்து சொந்தமாகவே ரூ. 50 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும்.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
