டாப் ஹீரோ அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவா?
ஷாலினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தற்போதும் புகழின் உச்சியில் தான் வலம் வருகிறார்.
தமிழில் காதலுக்கு மரியாதை என்று இவர் நடித்த முதல் படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார். அதை தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.
1999ம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக சேர்ந்து நடித்து அதன் மூலம் காதல் ஏற்பட இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சொத்து மதிப்பு
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் ஷாலினி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே நடிகை ஷாலினி ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அப்படி டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 50 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும்.

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
