தவறாக நடந்துகொண்ட மேனேஜர்கள்.. நடிகை ஷாலினி பாண்டே வேதனை!!
ஷாலினி பாண்டே
தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தை தொடர்ந்து தமிழில் 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
அதன் பின் மாதவன் நடித்த ‘சைலன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ஷாலினி பாண்டே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷாலினி பாண்டே தனது நடந்த கசப்பான அனுபவத்தை தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், “அர்ஜூன் ரெட்டி படத்தில் நடிக்கும் போது, என்னை நிறைய பேர் பாடிஷேமிங் செய்தார்கள். அந்த சமயத்தில் நான் கொஞ்சம் அதிக எடை கொண்டிருந்தேன். ஃபிட்னஸ் என்பது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது, உடல் தோற்றத்துடன் அல்ல".
"எனக்கு தென்னிந்திய மொழிகள் தெரியவில்லை என்பதால், ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். என் மானேஜர்கள் என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாகப் பயன்படுத்தி சில திரைப்படங்களில் நடிக்கச் சொல்லி ஏமாற்றினர். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய குடும்பம் தான்" என்று ஷாலினி பாண்டே கூறியுள்ளார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    