திரையரங்கிற்கு வந்து தனது குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்த்த நடிகை ஷாலினி- வீடியோவுடன் இதோ
ஜெயிலர் திரைப்படம்
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படம் வெளியான அன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே ஒரு வருத்தம் தான்.
அதிகாலை காட்சிகள் இங்கு ரத்து செய்யப்பட்டிருந்தது, ஆனாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லாமல் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை செய்ய தொடங்கியுள்ளது.
இரண்டு நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 150 கோடியை எட்டிவிட்டது, இன்று மற்றும் நாளை வசூலை காண ரசிகர்கள் இன்னும் ஆர்வமாக தான் உள்ளனர்.
திரையரங்கில் நடிகை
பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு வந்து ரஜினியின் ஜெயிலர் படத்தை கண்டு வருகின்றனர்.
அப்படி அண்மையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது தங்கை ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட்டுடன் படம் பார்க்க திரையரங்கம் வந்துள்ளார்.
அவரைக் கண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
Yesterday Video ! #ShaliniAjithkumar Madam watched #Jailer with Her sir #Shamlee & bro @richardrishi pic.twitter.com/FyIXCtSpAh
— ? Ajith Kumar?Fan (@thala_speaks) August 12, 2023
2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை- மொத்த கலெக்ஷன் விவரம்