சித்து உயிரோட தான் இருக்கா! கண் கலங்கி அழுத பிரபல சீரியல் நடிகை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரின் மரணம் குறித்த விசாரணை இன்னும் தொடர்ந்தபடி தான் உள்ளது. சித்ராவின் மரணத்திற்கு காரனமாக சந்தேகிக்கப்பட்ட அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார்.
சித்ரா நடித்திருந்த Calls திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் பிரபலங்களுக்கென அப்படத்தை தனியே திரையிட்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சித்ரா நல்ல பொண்ணு, நல்ல குணம், 3 வருஷமா அவள எனக்கு தெரியும், பழகியிருக்கேன், அவர் உயிரோட தான் இருக்கா, இருப்பா என உணர்ச்சிவசத்துடன் கண் கலங்கி பேசியுள்ளார்.