நடிகை ஜோதிகாவின் தோழியாக சிநேகிதியே படத்தில் நடித்த நடிகையா இது?- அடையாளமே தெரியலையே
நடிகை ஷர்பானி முகர்ஜி
கலைஞர்கள் மொழி தெரியவில்லை என்றாலும் எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்து கலக்கி வருகிறார்கள். அப்படி ஹிந்தி சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்து ஒரே ஒரு படம் நடித்தவர் ஷர்பானி முகர்ஜி.
கடந்த 1977ம் ஆண்டு ஹைவான் என்ற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
2000ம் ஆண்டு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான சிநேகிதியே திரைப்படத்தில் ஜோதிகாவிற்கு தோழியாக நடித்தார்.
அதன்பின் தமிழ் பக்கம் வராத ஷர்பானி மற்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தார்.
லேட்டஸ்ட் க்ளிக்
ஹிந்தி, மலையாளம், போஜ்பூரி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்த ஷர்பானி பாலிவுட் நடிகை கஜோலின் உறவினர் ஆவார்.
தற்போது 54 வயதாகும் ஷர்பானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆளே மாறிவிட்டாரே என ஷாக் ஆகி பார்த்து வருகின்றனர்.
மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வெளிவந்த உண்மை