நடிகை சரண்யாவுக்கு நடனம் கற்று தரும் தனுஷ்.. வைரலாகும் வீடியோ
தனுஷ்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ், ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார்.
கடந்த ஆண்டு ராயன் படத்தின் வெற்றிக்கு பின், தனுஷ் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருந்த இப்படத்தில் அனிகா, பவிஷ், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வைரலாகும் வீடியோ
இப்படத்தில் நடிகை சரண்யா கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷ் சரண்யாவுக்கு நடனம் கற்று தரும் காட்சி படத்தில் இடம் பெரும். தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்றை சரண்யா அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
