திருமணமே செய்யாமல் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை ஷோபனா- இதோ அம்மா, மகளின் புகைப்படம்
நடிகை ஷோபனா
நடிகை ஷோபனா என்று நாம் யோசித்தாலே முதலில் நியாபகம் வருவது அவரது பரதநாட்டியமும், கண்களால் பேசும் கலையும் தான்.
முறைப்படி பரதநாட்டியம் கற்ற இவர் சென்னையில் நடன பள்ளியும் வைத்து அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ள இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிய படங்களில் நடித்திருக்கிறார்.
பத்ம ஸ்ரீ, கலைமாமணி என ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரராகவும் இவர் உள்ளார்.
சொந்த வாழ்க்கை
நடனத்தில் நல்ல ஆர்வம் கொண்ட இவருக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை என தெரிகிறது. 52 வயதாகும் இவர் இதுவரை திருமணமே செய்யவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார், அவரது பெயர் ஆனந்த நாராயணி சந்திரகுமார் ஆகும்.
இதோ அவர்களது புகைப்படம்,
பிக்பாஸ் பணத்துடன் தனது மகனை சந்தித்த அசீம்- அழகிய தருணத்தின் புகைப்படம் இதோ