நடிகை கே.ஆர்.விஜயா உடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்
குழந்தை நட்சத்திரம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிவுலகம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறோம்.
இந்நிலையில் தற்போது பிரபல தென்னிந்திய நடிகையின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இவரா இது?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை நடிகை ஷோபனா தான். இவர் தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2 தேசிய விருதுகளையும் பெற்று இருக்கிறார்.
கடந்த 1980-ம் ஆண்டு வெளியான 'மங்கள நாயகி' படத்தில் ஷோபனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படத்தில் ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சரத்பாபு, சிவச்சந்திரன், மனோரமா, நிஷா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video