கண்களை வசீகரித்த நடிகை ஸ்ரேயா! மனதை ஈர்த்த அழகான புகைப்படங்கள்!
நடிகை ஸ்ரேயா சரணுக்கு தற்போது தெலுங்கு பக்கம் தான் நல்ல காற்று வீசுகிறது என கூறலாம். அதாவது அங்கே அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து அமைகின்றன.
தமிழில் கடைசியாக நாம் அவரை பார்த்தது கடந்த 2017 ல் சிம்புவுடன் AAA படத்தில் தான். இவ்வருடம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து வந்தார்.
சண்டக்காரி என்ற படமும் அவரின் கையில் உள்ளது. தெலுங்கில் ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்ட படமான RRR லிலும் Tadka என்ற ஹிந்தி படத்திலும் அவர் நடித்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த இசை கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதும் இந்தியாவில் அதிகம் சுற்றுவதையும் பார்க்க முடிகிறது.
தற்கிடையில் போட்டோ ஷூட்டும் நடத்தி வருகிறார்.


