படப்பிடிப்பு தளத்தில் இருந்து தெரித்து ஓடிய நடிகை ஸ்ரேயா சரண்- திடிரென என்ன ஆனது?
ஸ்ரேயா சரண்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, விஜய், விக்ரம், விஷால், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர் இப்போதும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவர் 2018ம் ஆண்டு ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
அவ்வப்போது நடிகை ஸ்ரேயா தனது மகள் மற்றும் கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
நடிகையின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரேயா பேசும்போது, நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப நாட்களில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டேன், ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்.
கந்தசாமி படத்தில் நடித்தபோது ஒரு காட்சிக்காக நிறைய டேக் எடுத்தார்கள், ஆனால் ஹீரோ விக்ரம் பொறுமையாக என்னோடு நடித்தார், அதை எப்போதும் மறக்கவே முடியாது.
அதேபோல் ரஜினி அவர்களுடன் சிவாஜி படத்தில் நடித்தபோது அவர் எனக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.,
நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், சக்சஸ்புல் படங்கள் செய்கிறீர்கள். நாளை இந்த நிலைமை மாறிவிடலாம், தோல்விகளை கூட சந்திக்க வேண்டி வரும், இருந்தாலும் ரசிகர்களோடு மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை சொன்னதாக கூறியுள்ளார்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
