40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஸ்ருதி ஹாசன்
இந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு கூலி படம் வெளிவந்தது. இப்படத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து Train என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இதுமட்டுமின்றி சலார் 2 படமும் கைவசம் வைத்துள்ளார்.
பிறந்தநாள், சொத்து மதிப்பு
இன்று நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பிறந்தநாள், தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 முதல் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.