நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலத்தில் எவ்வளவு விலைபோனது தெரியுமா?
சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமா நெஞ்சங்களில் என்றும் இளவரசியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு கொண்டவர் என்ற வாக்கியம் பொருந்தும் அளவிற்கு நடிகை உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் வளர்ந்த இவர் பள்ளி படிப்பை நான்காவது வகுப்பு வரை தான் முடித்துள்ளார்.
நடிகை ஆக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்த இவர் யாரும் எதிர்ப்பார்க்காத அளவு வளர்ச்சியை கண்டார்.
ஆனால் அவர் அந்த வளர்ச்சியை நன்றாக அனுபவிப்பதற்கு முன்பே தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
நடிகையின் ஆப்பிள்
ஒரு படப்பிடிப்பின் போது ஆப்பிளை கடித்துவிட்டு தனது அருகில் வைத்திருக்கிறார் சில்க் ஸ்மிதா, அங்கிருந்த ஒருவர் அதை எடுத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அந்த ஆப்பிளை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார்.
அந்த ஏலத்தில் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ரூ.200 வரை ஏலம் போனதாக தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.