இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் என தெரிகிறதா! அட இந்த நடிகையா
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்கள் பலருடைய சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில், 90ஸ் காலகட்டத்தில் டாப் நடிகையாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் யார் அந்த நடிகை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சிம்ரன்
அவர் வேறு யாருமில்லை, நடிகை சிம்ரன் தான். நடிகை சிம்ரன் ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து தனது திரை வாழ்க்கையை துவங்கினார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் ரூ. 91 கோடி வசூல் செய்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.