குட் பேட் அக்லி படத்தில் கலக்கிய நடிகை சிம்ரன்.. அவரது கணவர் பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
சிம்ரன்
நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் 90ஸ் கொடிகட்டி பறந்தவர். ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர் விஜய், அஜித், சூர்யா, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். ஒரு காலகட்டத்திற்கு பின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இப்படத்தில் சிம்ரனின் கேமியோ திரையரங்கை அதிர வைத்தது. அஜித்துடன் இவர் பேசும் அந்த காட்சி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக சசி குமாருடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி எனும் படத்தில் நடித்துள்ளார்.
சிம்ரனின் கணவர்
இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை சிம்ரன். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகை சிம்ரன் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
