இந்தி சினிமாவுக்கு நோ.. தமிழ் சினிமா குறித்து ஓப்பனாக சொன்ன நடிகை சிம்ரன்
சிம்ரன்
நடிகை சிம்ரன் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பின், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிம்ரன் ஓபன்
இந்நிலையில், இந்தி படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " தமிழில் இருந்து இந்தி சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இங்கே எனக்கு மிகவும் நிம்மதியாக உள்ளது. பாலிவுட் சினிமாவில் ஷோ ஆஃப் செய்வர். அதெல்லாம் எனக்கு சுத்தமாக செட்டாகாது" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
