சரியாக தேர்வு செய்து.. தனது சினிமா பயணம் குறித்து நடிகை சிம்ரன் சொன்ன ரகசியம்
சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருடைய நடனத்திற்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஓபன் டாக்
இந்நிலையில், சிம்ரன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவரது திரை வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " வாலி, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களில் நான் செய்த கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானவை. அப்போது தான் நான் சரியான இடத்திற்கு வந்துள்ளதை உணர்ந்தேன்.
சிறிய வேடம், பாடல் காட்சி என எதுவாக இருந்தாலும் என்னுடைய முழு பங்களிப்பை செலுத்தி நடித்தேன். 1999ம் ஆண்டுக்கு தான் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
