விஜய்யின் அரசியல் வருகை குறித்து சினேகா - பிரசன்னா கருத்து.. என்ன சொன்னாங்க தெரியுமா?
சினேகா - பிரசன்னா
புன்னகை அரசியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். திருமணம், குழந்தைகள் வளர்ப்பு என சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில், இவர் விஜய் ஜோடியாக GOAT படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நட்சத்திர தம்பதியான சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தங்களது ஆடை கடையின் ஆடைகளை கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அணியக் கொடுத்து ஒய்யார நடை என்னும் ரேம்ப் வாக் விழாவினை நடத்தியுள்ளனர்.
அந்நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த சினேகா-பிரசன்னாவிடம் நிறைய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அப்போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.
கருத்து
அதில், "விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலர் விரும்பினர். தற்போது, விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், நல்லது செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
அவர் சினிமாவை விட்டு செல்ல முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட விஷயம் அதனால் அதை கேள்வி கேட்க முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.