நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் தனது புன்னகையால் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் புன்னகை அரசி சினேகா.
இவர் தமிழில் வெளிவந்த என்னவளே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அஜித், விஜய், கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்துக்கொண்டு சினேகா, சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிகிறார்.
திருமண கோலத்தில் சினேகா பதிவு
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா, புகைப்படங்கள் அல்லது வீடியோவை வழக்கமாக பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது பட்டு புடவை, ஜொலிக்கும் நகைகள் என திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..



