44 வயதிலும் இளமையாக காணப்படும் நடிகை சினேகாவின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
நடிகை சினேகா
புன்னகை அரசியாக தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை சினேகா.
17-18 வயதில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் இப்போதும் சக்சஸ்புல்லாக கொண்டு செல்கிறார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு டாப் நாயகியாக இருந்தபோதே பிரசன்னாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
2 குழந்தைகளை பெற்று 44 வயதிலும் மிகவும் பிட்டாக இருக்கும் நடிகை சினேகாவை பார்த்தாலே பலருக்கும் ஆச்சரியம் தான்.

பிட்னஸ் சீக்ரெட்
அப்படி தனது பிட்னஸ் குறித்து ஒரு பேட்டியில் சினேகா கூறியுள்ளார்.

அதில் அவர், எல்லா வகையான பயிற்சிகளையும் நான் செய்துள்ளேன். ஒவ்வொரு பயிற்சியுமே, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் எனக்கு பயன்தராது. அப்படி பயன் தரவில்லையென்றால், உடனே வேறு பயிற்சிக்கு மாறிவிடுவேன்.
அப்படி இப்போது எடைப்பயிற்சி எனக்கு பயனளிக்கின்றன. தினமும் மிகக்குறைவான கலோரியே நான் எடுத்துக் கொள்வேன். அதில் மிகவும் கவனமாக இருப்பேன். சர்க்கரையையும் முற்றிலும் தவிர்த்துவிடுவேன்.

மாதம் ஒருமுறை, தோன்றினால் சர்க்கரை எடுத்துக் கொள்வேன். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுவதே எனக்கு பிடிக்கும், துரித உணவுகளுக்கு ஸ்ட்ரிக்ட் நோ, மாதம் ஒருமுறை வெளியில் சாப்பிடுவோம் என கூறியிருக்கிறார்.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
புத்தாண்டு ராசிபலன்.., நெருப்பு ராசிகளான மேஷம், தனுசு, சிம்மத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri